Tuesday, 5 November 2013

To turn off a monitor

கணினித்திரையை குறிப்பிட்ட நேரம்வரை அணைத்து வைக்க

மானிட்டரை ஆப் செய்ய வேண்டுமெனில் பவர்பட்டனை அழுத்தி மட்டுமே ஆப் செய்து வந்தோம் வேண்டிய நேரத்தில் மீண்டும் ஆன் செய்து கொள்ள முடியும். அவ்வாறு இல்லாமல் கணினித்திரையை அணைக்க ஒரு இலவச மென்பொருள் உள்ளது. இதை உங்களுடைய கணினியில் நிறுவிக்கொண்டு எவ்வளவு நேரத்திற்கு பிறகு ரீஸ்டார்ட் ஆக வேண்டுமோ அந்த நேரத்தை குறிப்பிடுவிட்டு மானிட்டரை ஆப் செய்து கொள்ளவும், பின் நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் கணிப்பொறி திரையானது ஆன் ஆக தொடங்கும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளின் மூலம் நீங்கள் விரும்பிய படி கணிப்பொறி திரையை அணைத்து வைத்துக்கொள்ள முடியும். மேலும் இந்த மென்பொருளானது இலவச (Freeware) ஆகும். ஒரு முக்கியமான விஷயம் என்னவெனில் நீங்கள் கணினித்திரைய அணைக்கும் முன்னர் எவ்வளவு நேரத்தில் ரிஸ்டார்ட் ஆக வேண்டும், என்பதை குறிப்பிட்டுவிட்டு Turn Off Monitor என்ற பட்டனை அழுத்தவும்.

நீங்கள் நினைக்கலாம் பவர் பட்டனை அழுத்தி கணினித்திரையை அணைத்து கொள்ளலாமே எதற்காக இந்த மூன்றால் தர மென்பொருள் என்று, இந்த மென்பொருள் மூலம் கணினித்திரை ஆப் செய்வதன் மூலம் உங்களுடைய நண்பர்களுக்கு சிறிது நேரம் விளையாட்டு காட்டலாம்.

இந்த மென்பொருளானது 300 க்கும் மேற்பட்ட மானிட்டர்களில் சோதிக்கப்பட்டது ஆகும். அனைத்து கணினித்திரையுமே ஆப் ஆகி மீண்டும் ரீஸ்டார்ட் ஆனது என்பது குறிப்பிடதக்கது. இந்த மென்பொருளை நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment