Tuesday, 29 October 2013

odio changes

altஓடியோ கோப்புகள் பல்வேறான போர்மட்களில் இணையத்தில் கிடைக்கின்றன. MP3, WMA, WAVE, FLAC, AAC, M4A மற்றும் OGG எனப் பல போர்மட்டுகளில் இவை உள்ளன.

இவற்றில் சிலவற்றை மட்டுமே சில கணணிகளில் இயக்க முடியும். பெரும்பாலான ஓடியோ இயக்கும் புரோகிராம்கள் அனைத்தையும் இயக்குவதில்லை.
எனவே தான் அவற்றின் மீது கிளிக் செய்தவுடன் விண்டோஸ் இதனை இயக்க புரோகிராம் ஒன்றை இணையத்தில் தேடவா என்று கேட்கும். இந்தச் சூழ்நிலையில் இது போன்ற ஓடியோ போர்மட் மாற்றும் புரோகிராம்கள் நமக்குத் தேவையாய் உள்ளன.

இந்த இலவச ஓடியோ மாற்றம் செய்யும் புரோகிராமினைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி. மேலே குறிப்பிட்ட அனைத்து போர்மட்களையும் இந்த புரோகிராம் கையாண்டு நமக்குத் தேவையான போர்மட்டில் மாற்றித் தருகிறது.

இதே போல பல வீடியோ போர்மட் கோப்புகளில் இருந்து ஓடியோவினை மட்டும் பிரித்தெடுத்து நாம் குறிப்பிடும் கோப்பு போர்மட்டில் தருகிறது. FLV மற்றும் MPEG போர்மட் கோப்புகளில் இந்த சோதனையை நடத்திய போது சிறப்பாக இயங்கியதனை உறுதி செய்திட முடிந்தது.

போர்மட் மாற்றிய ஓடியோ கோப்புகளை ஐ-ட்யூன் வகையில் வேண்டும் என விரும்பினாலும் அப்படியே மாற்றிக் கொள்ளலாம். ஐ-போன், ஐ-பாட் ஆகிய சாதனங்கள் இயக்கும் வகையிலான போர்மட்களிலும் மாற்றிக் கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஓடியோ கோப்புகளை இணைக்கலாம்.

தரவிறக்க சுட்டி

No comments:

Post a Comment