Tuesday, 29 October 2013

insert a excel file into word 2010

altஆப்பிஸ் தொகுப்பின் அண்மைய வெளியிடான 2010 மிகவும் சிறப்புடையதாகும். இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளது. இதில் மற்றும்மொரு சிறப்பம்சம் என்னவெனில்
வோர்ட் 2010 ல் இருந்தப்படியே எக்சல் சீட்டையும் இணைத்துக்கொள்ள முடியும். இந்த வசதியின் மூலமாக வேர்ட் தொகுப்பில் இருந்தப்படியே எக்சல் தொகுப்பையும் பயன்படுத்திக்கொள்ள முடியும். சில நேரங்களில் வேர்ட் தொகுப்பில் ஒரு சில கணக்குளை போட வேண்டிவரும் அதுபோன்ற நிலை பெரும் சிரமப்படுவோம். சதாரண கணக்கென்றால் பராவயில்லை மிகப்பெரிய அளவிளான கணக்குளை செய்ய வேண்டுமெனில் என்ன செய்வது எக்சல் உதவியைதான் நாட வேண்டும். இதற்கு பதிலாக எக்சல் சீட்டையே வேர்ட் தொகுப்பில் பயன்படுத்தினால் எவ்வளவு சுலபமாக இருக்கும்.

வேர்ட் 2010 தொகுப்பில் எக்சல் சீட்டை இணைக்க முதலில் வேர்ட் 2010 தொகுப்பை ஒப்பன் செய்யவும். அடுத்ததாக Insert என்னும் டேபை தேர்வு செய்யவும். அதில் டேபிள் என்னும் தேர்வை தேர்வு செய்யது, அதில் Excelspreadsheet என்பதை தேர்வு செய்யவும்.
alt
தற்போது எக்சல் சீட்டானது வேர்ட் டாக்குமெண்டில் இணைக்கப்பட்டிருக்கும். அதை பயன்படுத்தி எளிமையாக எக்சல் பணிகளையும் வேர்ட் தொகுப்பிலேயே செய்ய முடியும்.
alt
எக்சல் தொகுப்பை இணைத்தவுடன், எக்சல் தொகுப்பிற்கு உண்டான டூல்பாரையும் காண முடியும்.
alt
இந்த டூல்பாரின் உதவியுடன் எக்சல் பணிகளை மிகவிரைவாக செய்ய முடியும். வேர்ட் தொகுப்பை பயன்படுத்தி வேலை செய்பவர்களுக்கு இந்த வசதியானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
 

No comments:

Post a Comment