Sunday, 27 October 2013

போட்டோசாப்பில் மிக மிக முக்கியமான கருவி மாஸ்க் ,அதாவது படத்திற்கு முகமுடியிட்டு அழகு படுத்தப்போகிறோம். இக்கருவி பழக்கமாகிவிட்டால் பல அழகிய கவித்துவம் மிக்க படங்களை உருவாக்கலாம்.
படம்.1. போட்டோசாப்பில் இரண்டு படங்களை திறந்துள்ளேன்.
இரண்டு படங்களை மாஸ்கின் உதவியால் ஒட்டப்போகிறேன். இம்முறையில் ஒட்டிய வடிவத்தை பார்க்கமுடியாது.. ஒன்றுடன் ஒன்று இழைந்து காணப்படும்....
alt
படம்.2. இப்படத்தில் ரோஜாக்கள் உள்ள படத்தின் மீது குழந்தையின் படத்தை காப்பி & பேஸ்ட் முறையில் ஒட்டியுள்ளேன்.

இந்நிலை லேயர் விண்டோவில் தெரிகிறது..
alt
படம்.3. குழந்தையுள்ள படத்தின் மீது தான் மாஸ்க் உண்டாக்கப்
போகிறோம். அதற்கு எளிய வழி இவ்விண்டோவில் எப் அய்க்கானுக்கு பக்கத்தில் உள்ள சதுர வடிவ வட்டத்தினை கிளிக் செய்ய மாஸ்க் தோன்றிவிடும்.
alt
படம்.4. டூல் பாரில் உள்ள கிரேடியன் தேர்வு செய்ய வேண்டும். கிரேடியன் வண்ணம் கருப்பில் இருந்து வெள்ளைக்கு செல்வதாகவே இருக்க வேண்டும்.
இதை தேர்வு செய்ய வேண்டும். பிறகு மாஸ்க் மீது ஒரு கிளிக் செய்யுங்கள்.. அடையாளப்படுத்தியுள்ளேன்.
alt
படம்.5. இவ்விடத்தில் மிக மிக முக்கியமான இடம்.. முதலில் லேயரில் நமது தேர்வு இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பிறகு மறைக்க வேண்டிய இடத்தில் கிரேடியன் தேர்வை அழுத்தி இழுக்க படம் இழைந்து மறையும்.. எவ்வளவு தூறம் மறைய வேண்டும் என்பதை உங்களின் தேர்வை பொருத்தே அமையும்...
இப்போது மாஸ்கை பார்த்தால் கருப்பு வெள்ளை தோற்றம் பதிவாகியிருக்கிறது.. நமக்கு வேண்டிய தோற்றம் கிடைத்தவுடன் சேமியுங்கள்.. நீங்கள் இக்கருவியில் பழகிவிட்டால் நல்ல நல்ல வாழ்த்து அட்டைகளை உண்டாக்கலாம்..
alt

No comments:

Post a Comment