கூகுள் தேடு எந்திரத்தில் தேடும் எளிய வழிகள் (Computer Tips-4)
இணையத்தில் கொட்டிக்கிடக்கும் பலவகையான தகவல்களில் நமக்கு தேவையானதை
நாம் தேடி பெறுவது மிகவும் கடினமான செயலாகும். இந்த செயலினை நமக்கு
எளிதாக்கி தருவது கூகுல்(Google) தேடு எந்திரமாகும். இது நமக்கெல்லாம் ஒரு
வரப்பிரசாதம் என சொல்லலாம்.
இதிலும் ஒரு சில எளியத் தேடு வழிகள் உள்ளன. அதன் மூலமாக நாம் தேடும்
போது நாம் தேடியவை எளிதாக கிடைக்கின்றன.அது எவ்வாறு என பார்ப்போம்.
01." மேற்குறி "
நாம் விரும்பும் சொற்களை மிக சரியாக கண்டுபிடிக்க வேண்டும் எனில் அந்த சொற்களுக்கு நாம் டபுள் கொட்டேஷன் ( " world " )குறிகளை தரவேண்டும். சாதாரணமாக நாம் தேடு எந்திரத்தில் தரும் வார்த்தைக்கும் இந்த குறியுடன் தரும் வார்த்தைக்கும் என்ன வித்தியாசம்?.
எடுத்துக்காட்டாக World best temple என்று கொடுத்து தேடினால் 9,47,00,000 (ஒன்பது கோடியே நாற்பத்தி ஏழு லட்சம்) இடத்தில் உள்ளதாக காட்டுகிறது. இதே சொற்தொடரை கொட்டேஷன் குறியுடன் தரும் போது 6,870 இடத்தில் மட்டும் இருப்பதாக காட்டுகிறது. இந்த "கொட்டேஷன்" குறியின் மூலமாக தேவையில்லாத முடிவுகளை கொண்டதை இது நீக்கி விடுகிறது.நமக்கு சரியான முடிவினை தருகிறது.
02. குறிப்பிட்ட இடத்தில மட்டும் தேட
நமக்கு தேவையான தேடும் சொல் ஒரு குறிப்பிட்ட இணைய வெப்சைட்டில் தான் உள்ளது .ஆனால் அதை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை எனில் இந்த தேடும் முறையானது நமக்கு பயன்படும்.
நமக்கு நினைவில் உள்ள வெப்சைட்டினை வைத்து எவ்வாறு கண்டுபிடிப்பது என பார்க்கலாம்.
நாம் தேடும் சொல்லினை அந்த குறிப்பிட்ட வெப்சைட்டில் தேடும் படி கட்டளையினை தரலாம். எ.கா : நாம் தேடும் சொல் VISTA எனக்கொள்வோம். இச்சொல் MICROSOFT என்ற நிறுவனத்தின் வெப்சைட்டில் பயன்படுத்தியிருக்கலாம்.இதனை "Vista" site: www.microsoft.com என்று கொடுத்து தேடினால்.அந்த தளத்தில் மட்டும் சென்று தேடி அதனை காட்டும்.இதனை மைக்ரோசாப்ட் தளத்தில் சென்று தான் தேடவேண்டும் என்பதில்லை இப்படியும் பெறலாம்.
இதே போல் ஒரு குறிப்பிட்ட தளம்மில்லாமல் மற்றவற்றில் மட்டும் தேடவும் என்பதிற்கு இந்த கட்டளையை சற்று மாற்றிக் கொடுக்கலாம்.எ.கா: நீங்கள் Windows 7- ஐ அந்த தளத்தில் இல்லாமல் வேறு ஒரு தளத்தில் டவுண்லோட் செய்ய விரும்பினால் "windows 7" site: -microsoft.com என்று மாற்றிகொள்ளலாம்.இதில் உள்ள மைனஸ் (-) குறியானது microsoft தளத்தில் இருந்து தராதே என்பதிற்கான கட்டளை ஆகும்.
மேலும் வரையறுக்கப்பட்ட தளத்திலிருந்து மட்டும் தேடிப்பெற வேண்டுமெனில் தற்கு சற்று மாற்றி கட்டளை தரவேண்டும். எ.கா: essay on american history என்பதை அறிய விரும்பினால் இதனை கல்வி சார்ந்த தளத்தில் (.edu ) மட்டும் தேடி அறியலாம் "essay on american history " site:.edu என்ற கட்டளையினை தந்து தேடி பெறலாம்.
03.ஒரு பொருள் தரும் சொல்லை தேட டில்டே(~) குறியீடு
இவை ஒரு சொல் மட்டுமின்றி அந்த சொல்லின் பொருள் தரும் வேறு சொல்லினை தரு தளத்தினை தேடி அறிய விரும்பினால் இந்த குறியீடு பயன்படும் . இதனை தேடும் சொல்லின் முன் இடைவெளி இல்லாமல் தந்தாள் எ.கா: ("~Brake" ) இந்த சொல்லுக்கு வேறு பொருள் தரும் சொற்களின் பட்டியிலையும் நமக்கு தரும்.
04.கூகுள் தேடல் எந்திரத்தில் சொல்லுக்கான பொருள் (Defination ) அறிய
கூகுள் தேட மட்டுமல்ல சொல்லுக்கான பொருள் அறியவும் உதவுகிறது. நாம் எந்த சொல்லுக்கான பொருள் அறிய விரும்புகிறோமோ அந்த சொல்லின் முன் Define என்பதை சேர்க்க வேண்டும் எ.கா: "define:computer" என தரலாம் அல்லது define -க்கு பதிலாக "what is " எனவும் தந்து அறியலாம்.
மேலும் இவை பொருள் தருவது மட்டுமின்றி அச்சொல் அடங்கி உள்ள மற்ற தளங்களையும் நமக்கு பட்டியிலிடும்.
05. Astrick (*) கீயின் மூலமான பயன்கள்
நாம் தேடுவதை பற்றி முழுமையாக தெரியாத போது,அதில் தெரிந்த சில வார்த்தைகளை வைத்து கண்டறிய இந்த ஆஸ்டெரிஸ்க் ( * ) என்ற குறியீட்டினை பயன்படுத்தி கண்டுபிடிக்கலாம்.எடுத்து காட்டாக "NAME OF TANJORE BIG TEMPLE GOD*" இதில் தஞ்சை பெரிய கோயிலின் கடவுளின் பெயர் தெரியாத காரணத்தினால் GOD என்ற வார்த்தைக்கு பின் * -னை சேர்த்து தேடினால் அக்கோயிலின் கடவுள் பெயர் தெரியவரும்.
மேலும் அக்கோயில் சமந்தப்பட்ட அனைத்து தளங்களும் நமக்கு கிடைக்கும்.
06.கூகுல் தேடு பெட்டியில் கணிப்பான் (Calculator)
இதன் தேடு பெட்டியினை கணிப்பானகவும் (Calculator) பயன்படுத்தலாம்
நாம் 12 * 12= என கொடுத்து Enter தட்டினால் 144 என்ற விடையானது கீழே தெரிய வரும். இதனை அறிவியல்(Scientific) சார்ந்த கணிப்பனகவும் பயன்படுத்தலாம்.
மேலும் இதனை Currency Converter - கவும் பயன்படுத்தலாம்.இதுபோன்ற பல வசதிகள் இதில் உள்ளது .
இதனை செயல்படுத்தி பயன்பெறுக. மேலும் இதன் பயன் பற்றி உங்களுக்கு தெரிந்தால் தெரிவிக்கவும்.தவறு இருப்பின் தெரிவிக்கவும் திருத்திக்கொள்கிறேன்.

No comments:
Post a Comment