Wednesday, 30 October 2013

tips

அவசியமான சில கணினி டிப்ஸ்(Computer Tips) 

அவசியமான சில கணினி டிப்ஸ்(Computer Tips)

 
நாம் அன்றாடம் கணினியில் செய்யும் செயலுக்கான  டிப்ஸ். இது கணினிக்கு புதியவர் மற்றும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என  நினைக்கின்றேன். 01 FOLDER  TO  FOLDER  காப்பி,பேஸ்ட் செய்ய எளிய வழி
நாம் அடிக்கடி பைல்களை (File) ஒரு folder-ல் இருந்து  மற்றொரு folder -க்கு மாற்றும் செய்வோம் அல்லது ஒரு புரோகிராமிலிருந்து  (Program)  மற்றொரு புரோகிராமுக்கு மாற்றம் செய்வோம் இது இயல்பு .அவ்வாறு செய்ய பொதுவாக நாம்  Alt +Tab   கீகளை பயன்படுத்தி ஒரு folder -இல்  இருந்து மற்றொரு folder -க்கு Copy & Paste செய்து மாற்றம் செய்வோம் இது நமக்கு அலுப்பை தரலாம்.இதற்கு மாற்று வழி ஒன்றுள்ளது.முதலில் நீங்கள் அதற்கு ஏற்றவாறு  உங்களுடைய விண்டோவினை மாற்றிக்கொள்ளவேண்டும்.
நீங்கள் எந்த விண்டோக்களில் மாற்றம் செய்ய வேண்டுமோ அவற்றை தவிர மற்றவற்றை மினிமைஸ் செய்துகொள்ளவேண்டும்.
 
பின்பு டூல்பாரில் காலி இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும்மெனுவில் " Tile  Windows Vertically  " அல்லது  " Tile  Windows Horizontally  " இவற்றில் ஒன்றினை தேர்வு செய்தாள். தேர்ந்தெடுத்த விண்டோக்கள் இரண்டும்  ஒன்றுடன் ஒன்று ஒட்டியவாறு நமக்கு கிடைக்கும்.இதன் பின்பு Copy & Paste  செய்ய ஏதுவாக எளிமையாக இருக்கும்,
02.ஒரு போல்டரை போல் அணைத்து  போல்டரையும்  மாற்ற
விண்டோஸ் இயக்க டைரக்டரியில்  ஒரு போல்டரினைக் குறிப்பிட்ட வகையில் அமைகின்றோம்.அதனை போலவே அணைத்து போல்டரையும் மாற்ற விரும்பலாம் அதனை எவ்வாறு செய்வது என்பதினை நாம் இங்கு காணலாம்.சில ஆப்பரேட்டிங் சிஸ்டம்,பைல்களை மற்றும் போல்டர்களைக் காட்டுவதற்கு என்று டிபால்ட்டாக (default) சிலவற்றை அமைத்துள்ளது.அவை Thumbnails,Tiles,List,Icons  & Display with Details என சில உள்ளன.இவை எந்த போல்டரை மாற்றுகிறோமோ அது மட்டும் தான் மாறும்,மற்றவை மாறாது.
நமக்கு அணைத்து போல்டர்களும் ஒரே மாதிரியாக மாற வேண்டுமெனில்  சில மாற்றங்களை செய்ய வேண்டும்.அது எவ்வாறு என பார்ப்போம்.
முதலில் ஏதேனும் ஒரு டிரைவில்   போல்டர்  அதிகம்  உள்ள  பகுதியினை  திறக்கவும். அதில் காலி இடத்தில மௌசினை வைத்து ரைட் கிளிக் செய்து View என்பதில் கிளிக் செய்திடவும்.அதில் உங்களுக்கு பிடித்த வியூவினைத்  தேர்ந்தெடுக்கவும். பின்பு தேர்ந்தெடுத்த போல்டரில்  கீழ்   வருமாறு  செல்லவும்.
Tools -> Folder Option டயலாக் பாக்ஸ் திறக்கவும்.

படம் 2

இந்த  Folder Option டயலாக் பாக்ஸில் View டேப்பினை தேர்ந்தெடுக்கவும். இந்த டயலாக் பாக்சின் மேலுள்ள உள்ள Apply to all folders (படத்தில் சிகப்பு கட்டத்தில் காட்டி உள்ளதை) என்பதை தேர்ந்தெடுக்கவும்  இந்த் மாற்றத்தினை உறுதி செய்ய "Set all the folders on your computer to match the current folders view settings (except for toolbars and foder task)? Change will occur the next time you open them"  என்ற மெசேஜை  காட்டும் .OK-வினை கிளிக் செய்து வெளியேறவும். 
 
இப்போது நீங்கள் எந்த வியுவினை தேர்வு செய்தீர்களோ,அந்த View-இல் அனைத்து  போல்டர்களும் மாறியிருக்கும். இதன் பின்பும் நீங்கள் குறிப்பிட்ட போல்டரை உங்கள் விருபதிற்கு ஏற்றவாறு மாற்றிகொள்ளலாம். 03. பைல்கள் (files) மற்றும் போல்டர்களை (Folders) மறைத்துவைக்க
நமக்கு தேவையான முக்கிய தகவல்களை யாரும் பார்க்காதப்  படியும்
அழிக்காத படியும் எந்த ஒரு மென்பொருளின் துணையுமின்றி மறைத்து வைக்க. கீழ்வருமாறு செய்து மறைத்து வைக்கலாம்.மறைத்து  வைக்கவேண்டிய போல்டர் அல்லது பைல்களை தேர்ந்தெடுத்துக்கொண்டு மௌஸில் ரைட் கிளிக் செய்து அதில் வரும் Hidden  என்பதிற்கு முன்னுள்ள கட்டத்தில் டிக் செய்து பின்பு Apply & Ok செய்து வெளியேறவேண்டும்.
படம் 1,2-இல் உள்ளவாறு செய்யவும்.
 
படம் 1
படம் 2
 
இவ்வாறு செய்த பின்பு அந்த போல்டரில் உள்ள Tools மெனு சென்று அதில்  Folder Option  சென்று அதில் View மெனுவினை செலக்ட் செய்தால் அதில் "Hidden  Files & Folders " என்ற போல்டரில் "Do not show Hidden Files & Folders" என்பதிற்கு முன்னாள் உள்ள கட்டத்தை 'டிக்' செய்துகொண்டு  Apply  Ok தந்து வெளியேற வேண்டும் .(Tools ->Folder Option -> View ->Hidden Files & Folders)
 
 
படம் 3
இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த File  & Folder  மறைந்திருக்கும்.மீண்டும் இவை வேண்டுமெனில் மறைக்கப்பட்ட இடத்திற்கு சென்று மேலே சொன்ன கட்டத்தில் உள்ள 'டிக்' மர்க்கினை நீக்கி விட்டு, "Show Hidden Files & Folders" என்ற இடத்தில் உள்ள வட்டத்தில் 'டிக்'' மர்க்கினை  செய்யவேண்டும்   மீண்டும் மறைந்தவை தெரியும்.
 
பதிவு பிடித்திருந்தால் உங்களுடைய பொன்னான ஓட்டினை பதிவு செய்யவும்.
 

 

computer 4 tips

கூகுள் தேடு எந்திரத்தில் தேடும் எளிய வழிகள் (Computer Tips-4)

 
இணையத்தில் கொட்டிக்கிடக்கும் பலவகையான  தகவல்களில்  நமக்கு  தேவையானதை  நாம் தேடி பெறுவது மிகவும் கடினமான செயலாகும். இந்த செயலினை நமக்கு எளிதாக்கி தருவது கூகுல்(Google) தேடு எந்திரமாகும். இது நமக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதம் என  சொல்லலாம்.
இதிலும் ஒரு  சில எளியத் தேடு வழிகள் உள்ளன. அதன் மூலமாக நாம் தேடும் போது நாம் தேடியவை எளிதாக கிடைக்கின்றன.அது எவ்வாறு என  பார்ப்போம்.
01." மேற்குறி "
நாம் விரும்பும் சொற்களை மிக சரியாக கண்டுபிடிக்க வேண்டும்  எனில் அந்த சொற்களுக்கு நாம் டபுள் கொட்டேஷன் ( " world " )குறிகளை தரவேண்டும். சாதாரணமாக நாம் தேடு எந்திரத்தில் தரும் வார்த்தைக்கும் இந்த குறியுடன் தரும் வார்த்தைக்கும் என்ன வித்தியாசம்?.
எடுத்துக்காட்டாக World best temple என்று கொடுத்து தேடினால் 9,47,00,000 (ஒன்பது கோடியே நாற்பத்தி ஏழு லட்சம்) இடத்தில் உள்ளதாக காட்டுகிறது. இதே சொற்தொடரை கொட்டேஷன் குறியுடன் தரும் போது 6,870 இடத்தில் மட்டும் இருப்பதாக காட்டுகிறது. இந்த "கொட்டேஷன்" குறியின் மூலமாக தேவையில்லாத முடிவுகளை கொண்டதை இது நீக்கி விடுகிறது.நமக்கு சரியான முடிவினை தருகிறது.
02. குறிப்பிட்ட இடத்தில மட்டும் தேட
நமக்கு தேவையான தேடும் சொல் ஒரு குறிப்பிட்ட இணைய வெப்சைட்டில்  தான் உள்ளது .ஆனால் அதை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை எனில் இந்த தேடும் முறையானது நமக்கு பயன்படும்.
நமக்கு நினைவில் உள்ள வெப்சைட்டினை வைத்து எவ்வாறு கண்டுபிடிப்பது என பார்க்கலாம்.
நாம் தேடும் சொல்லினை அந்த குறிப்பிட்ட  வெப்சைட்டில்  தேடும் படி கட்டளையினை தரலாம். எ.கா : நாம் தேடும் சொல் VISTA எனக்கொள்வோம். இச்சொல் MICROSOFT என்ற நிறுவனத்தின் வெப்சைட்டில் பயன்படுத்தியிருக்கலாம்.இதனை "Vista" site: www.microsoft.com என்று கொடுத்து தேடினால்.அந்த தளத்தில் மட்டும் சென்று தேடி அதனை காட்டும்.இதனை மைக்ரோசாப்ட் தளத்தில் சென்று தான் தேடவேண்டும் என்பதில்லை இப்படியும் பெறலாம்.
இதே போல் ஒரு குறிப்பிட்ட தளம்மில்லாமல்  மற்றவற்றில் மட்டும் தேடவும் என்பதிற்கு இந்த கட்டளையை சற்று மாற்றிக் கொடுக்கலாம்.எ.கா: நீங்கள் Windows 7- ஐ  அந்த தளத்தில் இல்லாமல் வேறு ஒரு தளத்தில் டவுண்லோட் செய்ய விரும்பினால்  "windows 7" site: -microsoft.com என்று மாற்றிகொள்ளலாம்.இதில் உள்ள மைனஸ் (-)  குறியானது microsoft தளத்தில் இருந்து தராதே என்பதிற்கான கட்டளை ஆகும்.
மேலும் வரையறுக்கப்பட்ட தளத்திலிருந்து மட்டும் தேடிப்பெற வேண்டுமெனில் தற்கு சற்று மாற்றி கட்டளை தரவேண்டும். எ.கா: essay on american history என்பதை  அறிய விரும்பினால் இதனை கல்வி சார்ந்த தளத்தில்  (.edu ) மட்டும் தேடி அறியலாம் "essay on american history " site:.edu என்ற கட்டளையினை தந்து தேடி பெறலாம்.
03.ஒரு பொருள் தரும் சொல்லை தேட டில்டே(~)  குறியீடு
இவை ஒரு சொல் மட்டுமின்றி அந்த சொல்லின் பொருள் தரும் வேறு சொல்லினை தரு தளத்தினை  தேடி அறிய விரும்பினால்  இந்த குறியீடு  பயன்படும் . இதனை  தேடும்  சொல்லின் முன் இடைவெளி இல்லாமல் தந்தாள்  எ.கா: ("~Brake" )  இந்த சொல்லுக்கு வேறு பொருள்  தரும் சொற்களின் பட்டியிலையும்  நமக்கு தரும்.
04.கூகுள் தேடல் எந்திரத்தில் சொல்லுக்கான பொருள் (Defination ) அறிய
கூகுள் தேட மட்டுமல்ல சொல்லுக்கான பொருள் அறியவும் உதவுகிறது. நாம் எந்த சொல்லுக்கான பொருள் அறிய விரும்புகிறோமோ அந்த சொல்லின் முன் Define என்பதை சேர்க்க வேண்டும் எ.கா: "define:computer" என தரலாம் அல்லது define -க்கு பதிலாக "what is " எனவும் தந்து அறியலாம்.
மேலும் இவை பொருள் தருவது மட்டுமின்றி அச்சொல் அடங்கி உள்ள மற்ற தளங்களையும் நமக்கு பட்டியிலிடும்.
05. Astrick (*) கீயின் மூலமான பயன்கள்
நாம் தேடுவதை பற்றி முழுமையாக தெரியாத போது,அதில் தெரிந்த சில வார்த்தைகளை வைத்து கண்டறிய இந்த ஆஸ்டெரிஸ்க் ( * ) என்ற குறியீட்டினை பயன்படுத்தி கண்டுபிடிக்கலாம்.எடுத்து காட்டாக  "NAME OF TANJORE BIG TEMPLE GOD*" இதில் தஞ்சை பெரிய கோயிலின் கடவுளின்  பெயர் தெரியாத காரணத்தினால் GOD என்ற வார்த்தைக்கு பின் * -னை சேர்த்து  தேடினால் அக்கோயிலின் கடவுள் பெயர் தெரியவரும்.
மேலும் அக்கோயில் சமந்தப்பட்ட அனைத்து தளங்களும் நமக்கு கிடைக்கும்.
06.கூகுல் தேடு பெட்டியில் கணிப்பான் (Calculator)
இதன் தேடு பெட்டியினை கணிப்பானகவும் (Calculator)  பயன்படுத்தலாம்
நாம் 12 * 12= என கொடுத்து Enter  தட்டினால் 144 என்ற விடையானது கீழே தெரிய வரும். இதனை அறிவியல்(Scientific) சார்ந்த கணிப்பனகவும் பயன்படுத்தலாம்.
 
 
மேலும் இதனை Currency Converter - கவும் பயன்படுத்தலாம்.இதுபோன்ற பல வசதிகள் இதில் உள்ளது .
இதனை செயல்படுத்தி பயன்பெறுக. மேலும் இதன் பயன் பற்றி உங்களுக்கு தெரிந்தால் தெரிவிக்கவும்.தவறு இருப்பின் தெரிவிக்கவும் திருத்திக்கொள்கிறேன்.

25 tips to safe a computer

கணினியை பாதுகாப்பாக இயக்க 25 வழிகள்(Computer Tips)

நாம் கணினியை பயன்படுத்துகையில் பலவகையான பிரச்சனைகள் வரக்கூடும். அதிலும் நாம் இணையத்தில் இருக்கையில் நம்மை அறியாமலேயே கணினிக்கு கெடுதல் விளைவிக்கும் பல வைரஸ் உள்புகுந்திட வாய்ப்புள்ளது. இதனால் இன்டர்நெட் இணைப்பை பயன்படுத்தமுடியாமல் இருக்க முடியமா?முடியாது. நம்மில் பலர் கணினியை  பயன்படுத்தும் அளவு அதன் பாதுகாப்பில் அக்கறைக் கொள்ளமாட்டார்கள். அப்பொழுது நமக்கு கணினி பிரச்சனை தர ஆரம்பிக்கும். எனவே கணினிக்கு தேவையான பாதுகாப்பினை ஏற்படுத்திவிட்டால் இவ்வாறான பிரச்சனைகள் வராது. கணினியை எவ்வாறெல்லாம் பாதுகாக்கலாம் என்ற வழியினை  பார்ப்போம்.

 

 
௦01. கணினிக்கு தேவையான பாதுகாப்பு புரோகிராம் "ஆன்டி வைரஸ் புரோகிராம்". இதனை  நிறுவி அதன் மூலமாக வைரஸ்வருவதினை தடுக்கலாம். இதனை எப்பொழுதும் இயக்கதினிலே வைத்திருக்க வேண்டும் .  அதனை சரியான காலத்தில் அப்டேட் செய்துவைத்திருக்கவேண்டும்.
 
௦௦02. ஆன்டி ஸ்பைவேர் ஒன்று அல்லது இரண்டு பதிந்து வைத்து இயக்க வேண்டும். ஏற்கனவே கணினியிலேயே இருந்தால் நல்லது.



0௦3.இருவழி பயர்வால் தொகுப்பு ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். தற்போது வரும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் சேர்ந்தே வருகிறது. இல்லையெனில் இதனை நிறுவிக்கொள்ளலாம்.



௦04. ஆன்டி வைரஸ் மற்றும் பயர்வால் ஒன்று இருந்தாலே போதுமானது. இரண்டு மூன்று இருப்பின் பிரச்சனைதான்.



0௦5. ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான அப்டேட் பைல்களை கணினியில் நிறுவிட அனுமதிக்க வேண்டும். அப்பொழுதுதான்  கணினியில் ஏற்படும் பிரச்சனைகளை  ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் நிறுவனம் மூலம் கண்டறிந்து சரிசெய்ய முடியும்.



06. பிராட்பேண்ட் இணைப்பினை  ரௌட்டர்(ROUTER)  இல்லாமல்  பயன்படுத்தக்கூடாது. அது வயர்டு அல்லது வயர்லெஸ் எதுவாக இருந்தாலும்  சரி. இவை  கட்டாயம் NAT  அல்லது SPI ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்க வேண்டும்.


07. CD அல்லது பென்டிரைவு ( PENDRIVE ) போன்றவற்றை பயன்படுத்தும் போது அதில் உள்ள பைல்களில் வைரஸ் இருக்குமென சந்தேகம் வந்தால் அதனை நமது ஆண்டி  வைரஸ் உதவியுடன் சரிசெய்யலாம். இதன்பின்னும் வைரஸ் நீக்கமுடியவில்லை எனில் உடனே அதனை  virustotal.com   என்ற தளத்திற்கு அனுப்பி சரிசெய்யலாம் அல்லது   scan@virustotal.com 
என்ற இமெயில் முகவரிக்கு   scan  என்று சப்ஜெக்டில் டைப் செய்து அனுப்பினால் முழுமையாக ஸ்கேன் செய்து நமக்கு  தரும். 


08. நாம் விண்டோஸ் இயக்கத்தின் போது நமக்கு தெரியாமல் பல புரோகிராம்கள் இயங்கிகொண்டிருக்கும் அதனை டாஸ்க் மேனேஜரை கொண்டு என்ன என்ன புரோகிராம்கள் இயங்கிகொண்டிருக்கிறது என அறிந்து அவைதேவைப்பட்டால் வைத்துகொண்டு வைரஸ் பரவக்கூடிய புரோகிராம்களை நீக்கிவிடவேண்டும்.


09. CD அல்லது பென்டிரைவு ( PENDRIVE ) போன்றவற்றை பயன்படுத்தும் போது ஆட்டோ ரன் அல்லது ஆட்டோ ப்ளே இயங்குகின்றனவா? அதனை நிரந்தரமாக நிறுத்திவிடவேண்டும். இதற்கு Tweak Ul  நமக்கு உதவுகின்றது.


10. ஆன்டி வைரஸ் மூலம் தடுக்கமுடியாத போது வைரஸ் குறித்த சந்தேகங்களை மைக்ரோசாப்ட் மூலம் கேட்டு அறிந்துகொண்டு சரிசெய்யலாம்.


11. பாஸ்வோர்ட் பலம்வாய்ந்ததாக இருக்கவேண்டும். அது எண்கள் மற்றும் எழுத்துகள் கலந்ததாக இருப்பது நல்லது. நமது பாஸ்வோர்டினை  அடிக்கடி மாற்றிக்  கொண்டிருக்கவேண்டும். இணையத்தில் பாஸ்வோர்ட் அமைத்தல் தொடர்பான (www.passpub.com )தளங்கள் நிறைய உள்ளன. அதன் தகுந்த ஆலோசனைப்படி  பாஸ்வோர்டினை அமைத்துக்கொள்ளலாம்.



12. அனைத்து கணினிகளிலும் ஒரே பாஸ்வோர்டினைக் கொண்டு 

பயன்படுத்தவேண்டாம். ஏனெனில் அக்கணினியில் பாஸ்வோர்டினை  பதிவெடுக்கும் மென்பொருள்  ஏதேனும் இருப்பின் நமது பாஸ்வோர்ட் திருடப்படும். எனவே மாறான பாஸ்வோர்டினை  பயன்படுத்தவும்.  சிக்கலான மாஸ்டர் பாஸ்வோர்ட் ஒன்று வைத்துக் கொண்டு,அதில் சிறுசிறு மாறுதல்கள் செய்து பயன்படுத்தவும்.



13. நமது இமெயில்களில் வரும் அனைத்து லிங்குகளையும் திறந்து பார்க்ககூடாது. நமக்கு சந்தேகமில்லாத தெரிந்தவற்றை மட்டுமே திறக்கவேண்டும். மற்றவைகளை நீக்கிவிடலாம். ஏனெனில் அவற்றில் கணினிக்கு பாதிப்பு ஏற்படும் வைரஸ்கள் இருக்கலாம்.



14. இமெயிலில் வரும் விளம்பரம் மற்றும் கவர்சிகரமான அறிவிப்புகள்

கொண்டுவரும்  பைல்களை எக்காரணம் கொண்டும் திறக்கவேண்டாம். அவை நன்கு தெரிந்த பைல்கள் என்றால் மட்டும் திறக்கவும். இது போன்ற கவர்சிகரமான விளம்பரங்கள் மூலம் கெடுதல் விளைவிக்கும் வைரக்களை  பரப்பிவிடுகின்றனர்.


15. உங்கள் கணினியில் ஸ்பைவேர் உள்ளது அதனை நாங்கள் இலவசமாக நீக்கி தருகிறோம் என எந்த செய்தி வந்தாலும் உடனடியாக அதனை நீக்கிவிடவும். 


16.எப்பொழுதும் பிஷ்ஷிங் பில்டர்களை இயக்கநிளையிலேயே  வைத்திருக்க வேண்டும்.


17. உங்கள் பிரவுசர்களை பாதுகாப்பு அம்சங்கள் அதிகம்  உள்ளதை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும். இப்பொழுது கிரோம்  மற்றும் பயர் பாக்சில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை  விட பாதுகாப்பு சாதனங்கள் அதிகமாகும்.


18.ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல்களை நிரந்தரமாக நிறுத்திவையுங்கள். அவைத்தான் பிரவுசர்களை நம் அனுமதியின்றி சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இயக்க இவை உதவி புரிகின்றது. எனவே இதனை தடை செய்யவேண்டும்.


19. நம்மை  பற்றிய   தகவல்களை தருவதற்கு முன் அந்த தளம் பாதுக்காப்பானதா ,நம்பகமான தளமா என்பதை உறுதிசெய்யவேண்டும். நம்பகமான தளம்மெனில் அதன் முகவரியில் ' https ' என இருக்கவேண்டும் அல்லது வேறு இடங்களில் பூட்டுஅடையாளம் இருக்கவேண்டும்.



20. செக் பாயிண்ட்டின் புதிய சோன் அலார் ம் போர்ஸ் பீல்ட் முற்றிலும் பாதுக்காப்பான இன்டர்நெட் பிரவுசிங்கை  தருகின்றது.

பிரவுசருக்கும் உங்கள் கணினியில் அது ஏற்ப்படுத்தும் மாற்றங்களுக்கும் இடையே ஒரு படிமத்தை உருவாக்குகின்றது .


21. நம்மை பற்றிய தகவல் மற்றும் நம்முடைய புகைப்படங்கள் ஆகியவற்றை இணையத்தில் நிரந்தரமாக உறுதியற்ற தளங்களில்  தரவேண்டாம் . இதற்கென உள்ள தற்காலிக (www.10minutemail.com ) இமெயில் மூலம் பயன்படுத்தவும்.

22. பிரவுசிங் சென்டர் மற்றும் அலுவலகங்களில் கணினியை பயன்படுத்தும் போது உங்கள் தளங்களிலிருந்து வெளியேறும்  போது முழுமையாக Sign out செய்துவிட்டு வெளியேறவும். இல்லையெனில் உங்கள் தளங்களை தவறாக பயன்படுத்த வழியுண்டு.


23. உங்களுடைய வழக்கமான இமெயில் முகவரிகளை நமக்கு நெருங்கிய தோழர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டும் தரவும். மற்றவைகளுக்கு தற்காலிக இமெயில் முகவரியினை தரவும். இது நமக்கு மிகவும் பாதுக்காப்பானது ஆகும்.


24. நம்மை பற்றிய தகவல் மற்றும் முகவரியினை அறிய ஸ்பேம் மெயில்களாக  தருவார்கள் . அதனை நாம் கணினியிலிருந்து நிரந்திரமாக நீக்கிவிடவேண்டும். இல்லையெனில் நமது தகவல்கள் அனைத்தும் திருடப்படும்.


25.இமெயில்களை  ஸ்பேம்  பில்டர்களை கொண்டு பயன்படுத்தவும் . அப்பொழுதுதான் நமக்கு வரும் தகவல்களை ஆராய்ந்து அவை ஸ்பேம் மெய்லா அல்லது சரியானதா என்பதை கண்டறிந்து ஸ்பேம் ஏதேனும் இருப்பின் அழிகின்றது.


 
இவ்வாறு நாம் கணினியை பயன்படுத்தும் போது உரிய பாதுகாப்புடனும் மற்றும் எச்சரிக்கையுடனும் இருக்க முடியும். மேலும்  இப்பாதுகாப்பு முறையினால் வைரஸ் மற்றும் கணினி தகவல் திருடர்களிடமிருந்து பாதுகாப்புடன் இணையத்தில் உலவ  முடியும்.

Underline for each word

வேர்டில் (MS-WORD) சொற்களுக்கு கீழாக அன்டர்லைன்  செய்கையில்   

     சொற்களுக்கு இடையேயும் கோடு வருகிறதா?

நாம் ஒரு வார்த்தையின் கீழ் அன்டர்லைன் செய்ய " U " (Ctrl +U) 
பயன்படுத்துவோம் . அதில் வார்த்தைகளுக்கு இடையேயும் அன்டர்லைன் வரும்.

எ . கா : அன்னையும்      பிதாவும்

இவ்வாறு இல்லாமல் சொற்களுக்கு இடையே கோடு வராமல் இருக்க

Ctrl + Shift  + W  அழுத்தினால் வார்த்தைகளுக்கு இடையே கோடுகள் வராது .

எ . கா : அன்னையும்       பிதாவும்

Google Tips

Google - ன்  சில பயனுள்ள டிப்ஸ் 

01. குறிப்பிட்ட பெயருள்ள பைலையோ அல்லது குறிப்பிட்ட Extention File -ஐ  தேர்ந்தெடுக்க 

word +filetype:pdf

எதை பற்றி அறிய வேண்டுமோ அந்த வார்த்தை + filetype:pdf  (or) xls  

உதாரணம் : Seven Wonders+filetype:pdf  

02. எந்த  நகர  வரைபடங்களையும்  காண

map : <city name>

உதாரணம் : map :chennai 

03. அனைத்து நாடுகளின் நேரங்களையும்  அறிய

time: <Country name>

உதாரணம் : time:china 

04. நமக்கு வேண்டிய நகரத்தின் வானிலை அறிய

weather :<city name>

உதாரணம் : weather : mumbai 

05. விமானத்தின் விவரம் அறிய

Airline Name <Flight Number>

உதாரணம் : Air India 605

To find a IP address of a Domain

நாம் பார்க்கும் தளத்தின் (Domain) IP  ADDRESS  அறிய 


01 START கிளிக் செய்து

02 பின்பு அதில் உள்ள RUN-ஐ திறந்து  அதில் cmd  என டைப் செய்து OK 

     செய்யவும்.

03 இப்பொழுது Command  Prompt   விண்டோ திறக்கும்

04 அதில் tracert websiteURL ( நாம் IP address அறியவேண்டிய தளத்தின் URL)

      எடுத்துகாட்டாக : C:\>tracert www.arivu-kadal.in 

 
[அல்லது] 


01 START கிளிக் செய்து

02 பின்பு அதில் உள்ள RUN-ஐ திறந்து  அதில் cmd  என டைப் செய்து OK   

     செய்யவும்.

03 இப்பொழுது Command  Prompt   விண்டோ திறக்கும்

04 அதில் ping websiteURL ( நாம் IP address அறியவேண்டிய தளத்தின் URL)





To delete a file

 அழிக்க முடியாத பைல்களை அழிக்க 

சில நேரங்களில் ஹார்ட் டிஸ்கில் இடப்பற்றாக்குறை ஏற்படும் போது தேவையில்லாத பைல்களை அழிப்போம். அதுபோன்று நீக்கும் போது சில பைல்கள் நேரிடையாக அழிக்க முடியாமல் போகலாம் Cannot Delete File என தோன்றும். இது போன்ற பைல்களை அழிக்க கீழ்வரும் செயல்களை பின்பற்றினால் அழிக்கமுடியும்.

01. அழிக்க நினைக்கும் பைல் எந்த டிரைவில் எந்த போல்டரில் உள்ளதென அறிந்துகொள்ளவேண்டும் 


2. எடுத்துக்காட்டாக C  டிரைவில் mydoc என்ற போல்டரில்  உள்ளதெனில் அதன் சரியான Path -தினை அறிந்துகொள்ளவேண்டும். C:\Documents  and Settings \ mydoc.txt  

03. பாதுகாப்பாக இதனை செய்ய கணினியை ரிஸ்டார்ட் செய்து கணினி பூட் ஆகும் போது F8 அழுத்த வேண்டும். இப்பொழுது திரையில் Advance Boot Options  Menu  தெரியும். அதில் Safemode With Command Prompt -என்பதில் கிளிக் செய்து டாஸ்  ப்ரம்ப்டில் நுழையவேண்டும்.

04. இனி  Command Prompt - ல் துடிக்கும் புள்ளியில் cd C:\Documents  and Settings  என டைப் செய்யவேண்டும். இதில் cd என்பது Change Directory என்பதை குறிகின்றது.

05. மேலே கூறியவாறு டைப்செய்து என்டர் அழுத்திய உடன் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இப்பொழுது அதில் del mydoc.txt  என டைப் செய்து  என்டர் தட்டினால் நாம் Delete செய்ய நினைத்த பைல் இப்பொழுது காணாமல் போயிருக்கும்.



to safe a pendrive

 பென் டிரைவில் எந்த மென்பொருளுமின்றி வைரஸை நீக்க 


சுலபமாக தகவல்களை கையாள நமக்கு துணைபுரிவது இந்த பென் டிரைவாகும். இதனை பல கணினிகளில் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் சுலபமாக வந்துவிடுகிறது. இது போன்று வைரஸ் உள்ள பென் டிரைவினை திறக்கவோ அல்லது தகவல்களை ஏற்றவோ அல்லது இறக்கவோ முடியாது.

பென் டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை என்றால் அதனை "பார்மட்" செய்து வைரஸினை நீக்கிவிடலாம். ஒருவேளை அதில் முக்கியமான தகவல் இருப்பின் என்ன செய்ய?

கவலையில்லை அதனை எந்த விதமான மென்பொருளும்  இன்றி சுலபமாக மீட்டுவிடலாம். அது எவ்வாறு என காணலாம்.




பென் டிரைவினை கணினியில் இணைத்தப்பின் செய்யவேண்டியது

01. START  ------> RUN சென்று  அதில் CMD என டைப் செய்து ENTER  கீயினை அழுத்தவும்

02. இப்பொழுது Command Prompt திறக்கும். அடுத்து பென் டிரைவ் கணினியில் எந்த டிரைவில் உள்ளது என அறிந்துகொண்டு  Command Prompt-ல்  அந்த டிரைவிற்கு செல்லவேண்டும். (உ.ம்) H டிரைவ் எனில்   H : \ > என மாற்றிக்கொள்ள வேண்டும்.

03. பின்பு H :\ >attrib s h /s/d *.* என டைப் செய்யவேண்டும். சரியான இடைவெளியுடன் டைப் செய்தது உறுதிசெய்தவுடன் ENTER கீயினை அழுத்த வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து  பென் டிரைவினை திறந்து பார்த்தால் அனைத்து தகவலும் நமக்கு கிடைக்கும்.


II  அழிக்க முடியாத பைல்களை அழிக்க 


சில நேரங்களில் ஹார்ட் டிஸ்கில் இடப்பற்றாக்குறை ஏற்படும் போது தேவையில்லாத பைல்களை அழிப்போம். அதுபோன்று நீக்கும் போது சில பைல்கள் நேரிடையாக அழிக்க முடியாமல் போகலாம் Cannot Delete File என தோன்றும். இது போன்ற பைல்களை அழிக்க கீழ்வரும் செயல்களை பின்பற்றினால் அழிக்கமுடியும்.

01. அழிக்க நினைக்கும் பைல் எந்த டிரைவில் எந்த போல்டரில் உள்ளதென அறிந்துகொள்ளவேண்டும் 

02. எடுத்துக்காட்டாக C  டிரைவில் mydoc என்ற போல்டரில்  உள்ளதெனில் அதன் சரியான Path -தினை அறிந்துகொள்ளவேண்டும். C:\Documents  and Settings \ mydoc.txt  

03. பாதுகாப்பாக இதனை செய்ய கணினியை ரிஸ்டார்ட் செய்து கணினி பூட் ஆகும் போது F8 அழுத்த வேண்டும். இப்பொழுது திரையில் Advance Boot Options  Menu  தெரியும். அதில் Safemode With Command Prompt -என்பதில் கிளிக் செய்து டாஸ்  ப்ரம்ப்டில் நுழையவேண்டும்.

04. இனி  Command Prompt - ல் துடிக்கும் புள்ளியில் cd C:\Documents  and Settings  என டைப் செய்யவேண்டும். இதில் cd என்பது Change Directory என்பதை குறிகின்றது.


05. மேலே கூறியவாறு டைப்செய்து என்டர் அழுத்திய உடன் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இப்பொழுது அதில் del mydoc.txt  என டைப் செய்து  என்டர் தட்டினால் நாம் Delete செய்ய நினைத்த பைல் இப்பொழுது காணாமல் போயிருக்கும்.



Tuesday, 29 October 2013

how to lock a folder

altஒரு Folder ஐ மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இணையத்தில் கிடைகின்றன. இங்கு எந்த ஒரு மென்பொருளையும் பாவிக்காமல் வெறும் Notepad இனை மாத்திரம் வைத்து ஒரு Folder ஐ எவ்வாறு Lock செய்யலாம் என்று பார்ப்போம்
உதாரணமாக உங்களிடம் tamil என்ற folder இருக்குதெனில் அந்த folder ஐ lock செய்வதற்கு பின்வரும் வழிமுறையை பின்பற்றவும் alt


முதலில் ஒரு Nodepad ஐ திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்.
ren tamil tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
 
பின் அந்த Notepad ஐ lock.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.

பின் இன்னொரு Notepad ஐ த் திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்

 
ren tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} tamil

பின் அந்த Notepad ஐ key.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.

இங்கு tamil என்பது நீங்கள் Lock செய்ய வேண்டிய Folder இன் பெயர் ஆகும்.இனி குறிப்பிட்ட அந்த tamil என்ற போல்டெர் ஐ Lock செய்வதற்கு lock.bat என்ற file ஐ double click செய்தல் வேண்டும் .

Lock செய்த Folder ஐ மீண்டும் Unlock செய்வதற்கு key.bat என்ற File ஐ double click செய்தல் வேண்டும்.

இதில் கவனிக்க வேண்டிய ஒரு விடயம் நீங்கள் folder ஐ Lock செய்யும் போது Lock செய்யும் Folder உம் lock.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அதே போல Unlock செய்யும் போது unlock செய்யும் Folder உம் key.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.

இனியென்ன அந்த key.bat என்ற வேறொரு Drive இல் சேமித்து விடுங்கள். அந்த File இல்லாமல் உங்கள் folder ஐ யாரும் திறக்க முடியாது .

open all files through freeopener


கணினியில் பணியாற்றும் போது பல்வேறு விதமான டாக்குமெண்ட்களை கையாளுவோம், ஒரு சில பைல் பாமெட் கொண்ட் பைல்களையே அதிகமாக பயன்படுத்துவோம் குறிப்பாக வேர்ட், பிடிஎப், ஆடியோ பைல்கள், வீடியோ பைல்கள்இதுபோன்ற பைல் பார்மெட்களை தான் நாம் அதிகமாக பயன்படுத்தி வருவோம். இதுபோல் அதிகமாக பயன்படுத்தும் பைல் பார்மெட்களுக்கென மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தி வருவோம். ஆனால் ஒரு சில பைல்களை அவ்வபோது குறிப்பிட்ட தேவைக்காக மட்டுமே பயன்படுத்தி வருவோம். அதுபோன்ற பைல்களை காண வேண்டுமெனில் அதற்கென உரிய மென்பொருளை நிறுவினால் மட்டுமே அந்த குறிப்பிட்ட பைலை நம்மால் காண முடியும். இதனால் ஒரு சில டாக்குமெண் ட்களை நம்மால் காண முடியாமலேயே போய்விட கூடிய சூழ்நிலையும் உண்டு. இதுபோன்ற சிக்கல்களை சமாளிக்க ஒரு மென்பொருள் வழிவகை செய்கிறது. இந்த மென்பொருள் மூலமாக பல்வேறு விதமான பைல் பார்மெட் கொண்ட பைல்களை காண முடியும்.


மென்பொருளை தரவிறக்க சுட்டி(click here)
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்யவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் எந்த பைலினை ஒப்பன் செய்ய வேண்டுமோ அதனை திறந்து பார்க்கவும். இந்த மென்பொருளானது பல்வேறு விதமான பைல் பார்மெட்களை சப்போர்ட் செய்யக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இந்த மென்பொருளின் உதவியுடன் 75கும் மேற்பட்ட பைல்பார்மெட்களை ஒப்பன் செய்ய முடியும்.
PDF, DOC, AVI, DOCX, ZIP, JAR, XML, HTML, SWF, 7Z, PHP, XLSX, MKV, FLV, XLS, JPEG, TXT, PSD, WMV, CR2, CRW, GIF, MSG, NEF, TIFF, JPG, MOV, MP4, LOG, PNG, CS, INI, MPEG, MPG, CSS, MP3, CFG, HTM, BMP, JS, XLSM, WA, ICO, REG, DNG, ARW, MID, ORF, RAF, PEF, RESX, CF2, ERF, MEF, MRW, SR2, X3F இதுபோல இன்னும் பல பைல் பார்மெட்களை இந்த மென்பொருளானது சப்போர்ட் செய்யும்.  மேலும் இந்த மென்பொருள் சப்போர்ட் செய்யக்கூடிய பைல் பார்மெட்களை காண சுட்டி.(click here)

how to rectify the problem in hard disk

altஅதிக நாட்களாக பயன்படுத்தப்படும் வன்தட்டுகளில் பலவிதமான கோளாருச் செய்திகள் காணப்படும். விண்டோஸ் நிறுவப்பட்டுள்ள கணினியில் இதுபோன்ற கோளாருச் செய்திகள் அதிகமாக காணப்படும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம்
தேவை இல்லையெனில் மென்பொருள்களை நம்முடைய கணினியில் இருந்து நீக்கி விடுவோம். கணினியில் இருந்து நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நம்முடைய கணினியை விட்டு நீங்காது. மேலும் ஒரு சில பைல்கள் நம்முடைய கணினியிலேயே தங்கிவிடும் அந்த பைல்களால் நம்முடைய கணினியில் அடிக்கடி ஏரர் செய்தி காட்டும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவும் போது செக்டர் பகுதிகளாகவே சேமிக்கப்படும். மென்பொருள்களை நீக்கும் போது குறிப்பிட்ட பகுதி மட்டும் வெற்றிடமாக்கப்படும் இந்த பகுதிகளில் மீண்டும் தகவல் பதியப்படும் முழுமையாக இல்லை குறிப்பிட்ட பகுதியில் மட்டும், மற்றவைகள் வழக்கம் போல காலியாக உள்ள இடத்தில் பதியப்படும். இதனால் வன்தட்டில் எரர் செய்தி வருவதோடு கணினி தொடக்கமும் மந்தமாகும். இதுபோன்ற எரர் செய்திகளை சரிசெய்ய ஒரு மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

alt


இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து வேண்டிய ட்ரைவ் கோலனை தேர்வு செய்து, Read only பொதானை அழுத்தி சோதனை செய்து கொண்டு, எரர் செய்தி இருப்பின் Fix பொத்தானை அழுத்தவும். எரர் செய்திகளை நீக்கம் செய்ய வேண்டுமெனில் Fix and Recover பொத்தானை அழுத்தி இந்த எரர் செய்திகளை மீட்டுக்கொள்ள முடியும். பின் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு இந்த மென்பொருள் சிறந்தது ஆகும். வன்தட்டினை சீரமைக்க இந்த மென்பொருள் சிறந்தது ஆகும்.

insert a excel file into word 2010

altஆப்பிஸ் தொகுப்பின் அண்மைய வெளியிடான 2010 மிகவும் சிறப்புடையதாகும். இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளது. இதில் மற்றும்மொரு சிறப்பம்சம் என்னவெனில்
வோர்ட் 2010 ல் இருந்தப்படியே எக்சல் சீட்டையும் இணைத்துக்கொள்ள முடியும். இந்த வசதியின் மூலமாக வேர்ட் தொகுப்பில் இருந்தப்படியே எக்சல் தொகுப்பையும் பயன்படுத்திக்கொள்ள முடியும். சில நேரங்களில் வேர்ட் தொகுப்பில் ஒரு சில கணக்குளை போட வேண்டிவரும் அதுபோன்ற நிலை பெரும் சிரமப்படுவோம். சதாரண கணக்கென்றால் பராவயில்லை மிகப்பெரிய அளவிளான கணக்குளை செய்ய வேண்டுமெனில் என்ன செய்வது எக்சல் உதவியைதான் நாட வேண்டும். இதற்கு பதிலாக எக்சல் சீட்டையே வேர்ட் தொகுப்பில் பயன்படுத்தினால் எவ்வளவு சுலபமாக இருக்கும்.

வேர்ட் 2010 தொகுப்பில் எக்சல் சீட்டை இணைக்க முதலில் வேர்ட் 2010 தொகுப்பை ஒப்பன் செய்யவும். அடுத்ததாக Insert என்னும் டேபை தேர்வு செய்யவும். அதில் டேபிள் என்னும் தேர்வை தேர்வு செய்யது, அதில் Excelspreadsheet என்பதை தேர்வு செய்யவும்.
alt
தற்போது எக்சல் சீட்டானது வேர்ட் டாக்குமெண்டில் இணைக்கப்பட்டிருக்கும். அதை பயன்படுத்தி எளிமையாக எக்சல் பணிகளையும் வேர்ட் தொகுப்பிலேயே செய்ய முடியும்.
alt
எக்சல் தொகுப்பை இணைத்தவுடன், எக்சல் தொகுப்பிற்கு உண்டான டூல்பாரையும் காண முடியும்.
alt
இந்த டூல்பாரின் உதவியுடன் எக்சல் பணிகளை மிகவிரைவாக செய்ய முடியும். வேர்ட் தொகுப்பை பயன்படுத்தி வேலை செய்பவர்களுக்கு இந்த வசதியானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
 

twitter

altTweetMyPC நீங்கள் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் வீட்டுக் கணினியை இயக்குவதை சாத்தியமாக்கிறது.

இணையத்தளமூடக உங்கள் வீட்டுக் கணினியை இயக்க இது உதவுகிறது இந்தTweetMyPC .
TweetMyPC வேறு இடத்தில் நீங்கள் இருந்தாலும் Twitter ஊடாக உங்கள் கணினியை இயக்க உதவுகிறது.

1. இதற்காக வெறுமேனே உங்கள் கணினியில் இந்த செயலியை தறவிறக்கம்( Download) செய்யவும்..

2. பின்னர் www.Twitter.com என்ற தளத்துக்கு சென்று புதிய டியூட்டர் (Twitter) கணக்கு ஒன்றை ஆரம்பிக்கவும். இக் கணக்கு TweetMyPC க்கு மட்டும் பிரத்தியோகமானது

{Go to www.Twitter.com and create a new Twitter account for your PC (This is optional as TweetMyPC only responds for updates). This account will be used by TweetMyPC to monitor for new tweets}

3. உங்கள் பயனாளர் கணக்கை பெயர் , கடவுச்சொல் கொடுத்து TweetMyPC இயக்கவும். சற்று தாமதித்து இரட்டை சொடுக்குகள் மூலம் Twitter ஐ இயக்கி TweetMyPC ஐ ஆரம்பிக்கவும்.

{Start TweetMyPC and then fill in the login details. Wait for some time for the application to verify your login details & Double click the Twitter Icon to start TweetMyPC }

அதே பயனாளர் கணக்குடன் எங்கிருந்தாவது உள் நுளையும்போது உங்கள் கணினியை நிறுத்தவோ ( Shutdown ) செய்யவோ மீள் ஆரம்பம்(Restart) செய்யவோ முடிகிறது.
சிறுவர் கூட இதை எளிதாக செயல்படுத்தலாம்

http://tweetmypc.en.softonic.com/

http://tweetmypc.codeplex.com/Release/

how to search a file

altStart பட்டன் அழுத்தி Search என்பதில் கிளிக் செய்தி்டவும். கிடைக்கும் பாக்ஸில் What do you want to search for ? என்று கொடுக்கப்பட்டு்ள்ள பிரிவில் For File or Folders என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இங்கே Search by any or all of the criteria below என்று காட்டப்பட்டு பல பிரிவுகள் கீழே தரப்படும்.
1. உங்களுக்கு அந்த பைலின் பெயர் தெரியாது. ஆனால் என்ன வகை பைல் என்று தெரியும். அது *.doc, Excel *.xls, Acrobat *.pdf, *.ppt மற்றும் *.exe என என்னவாக வேண்டுமானாலும். இருக்கலாம். பைலை முதல் பிரிவில் தரவும்.
2. பெயரும் தெரியவில்லை ; என்ன வகையில் சேவ் செய்தோம் எனவும் தெரியவில்லை. அது *.doc அல்லது *.txt என்பது மறந்துவிட்டது. ஆனால் பைலில் உள்ள ஒரு வாசகம் ஞாபகத்தில் தேடலாம். இதனை இரண்டாவது பிரிவில் தந்து தேடலாம்.
3. மேற்காணும் வகையில் உள்ள பைல்கள் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு குறிப்பிட்ட டிரைவில் தான் உள்ளது. என நீங்கள் உறுதியாக நம்பினால் அந்த டிரைவை மட்டும் கொடுத்து தேடலாம். இதனை Look IN : என்ற பிரிவில் டிரைவ் எழுத்தைத் தந்து தேடலாம். எழுத்தைக் டைப் செய்வதற்குப் பதிலாக அதில் உள்ள சிறிய முக்கோணத்தில் கிளிக் செய்தால் வரிசையாக உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டிரைவ்கள் காட்டப்படும். அதனைத் தேர்ந்தெடுத்தும் தேடலாம்.
4. இதே வரிசையில் மேலும் சில தேடல் வகைகளை இங்கு பார்க்கலாம். குறிப்பிட்ட நாளில் அதனை பயன்படுத்தி இருப்பது நினைவில் இருந்தால் அந்த தேதியைக் கொடுத்தும் தேடலாம்.

இப்படி பல வகைகளில் தேடினால் நிச்சயம் ஒரு வகையில் நமக்கு பைல் கிடைக்கும்.

cd

altநீங்கள் அடிக்கடி சீடி பயன்படுத்துபவராக இருந்தால் இந்த சூழ்நிலையில் நீங்கள் என்றாவது சிக்கி இருப்பீர்கள்.
ஆம் உங்கள் சீடி கணணியின் சீடி டிரைவில் இருந்து வெளியே வராமல் உங்களை மோசமான நிலையில் சிக்க வைக்கும்.
எத்தனை முறை சீடி டிரைவின் எஜெக்ட் பட்டனை அழுத்தினாலும் அப்படியே டிரைவ் வெளியே வராமல் இருக்கும். இந்த சூழ்நிலையில் என்ன செய்தால் சீடி டிரைவ் திறக்கப்பட்டு சீடி வெளியே எடுக்கும்படி கிடைக்கும் என்பதனைப் பார்க்கலாம்.

முதலில் சீடி டிரைவ் திறக்கப்பட்டு சிடி இருக்கும் அந்த பிளாஸ்டிக் ட்ரே வெளியே நீண்டு வரவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். இந்த சூழ்நிலையை சமாளித்து சீடியை கீழ்க்காணும் வழிகளைக் கையாண்டு வெளியே எடுக்கலாம்.

வழி 1: மை கம்ப்யூட்டர் ஐகானில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் டெஸ்க்டொப்பில் இந்த ஐகான் இல்லை என்றால் நிச்சயம் ஸ்டார்ட் மெனுவில் இருக்கும். இதனைத் திறந்தவுடன் உங்கள் கணணியின் டிரைவ்கள் அனைத்தும் காட்டப்படும்.

இதில் Devices with removable stroage என்ற பிரிவில் சீடியின் படத்துடன் ஒரு ஐகான் இருக்கும். அல்லது சிக்கிக் கொண்ட சீடி ஏதேனும் ஒரு நிறுவனம் தந்துள்ள பேக்கேஜ் என்றால் நிறுவனம் தந்துள்ள ஐகானுடன் அந்த டிரைவ் காட்டப்படும்.

இதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Eject என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் சீடி டிரைவில் உள்ள எஜெக்ட் பட்டன் தேய்ந்து போய் நீங்கள் அழுத்துகையில் அதன் செயல்பாடு மேற்கொள்ளப்படாத சூழ்நிலையில் இந்த வழி செயல்படும். இதற்கும் சீடி டிரைவ் திறக்கவில்லை என்றால் அடுத்த வழியைப் பார்க்கலாம்.

வழி 2: பேப்பர் கிளிப் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். (ஜெம் கிளிப் என்றும் சிலர் இதனை அழைக்கின்றனர்) அதன் ஒரு முனையை பிரித்து நீட்டுங்கள். சீடி டிரைவின் எஜெக்ட் பட்டன் அருகே சிறிய துளை இருப்பதைக் காணுங்கள். நிச்சயம் இதுவரை நீங்கள் இதனைக் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பீர்கள்.

இப்போது நிச்சயம் இதன் உதவி வேண்டியதிருக்கிறது. இந்த துளையில் மெதுவாக பிரித்த பேப்பர் கிளிப்பின் சிறிய கம்பியை உள்ளே செலுத்தவும். சிறிது உள்ளே செலுத்தியவுடன் அது ஒரு இடத்திற்கு மேல் செல்லாது.

இந்த இடத்தில் சிறிய அளவில், மிகச் சிறிய அளவில் அழுத்தம் கொடுக்கவும். எஜெக்ட் செய்யும் போது இயங்கும் இன்டர்னல் லாக் உள்ள இடத்தில் இந்த அழுத்தம் கிடைப்பதால் டிரைவின் கதவு திறக்கும்.

உடனே சீடியை எடுத்துவிட்டு மீண்டும் டிரைவின் கதவினை மூடவும். மறக்காமல் பேப்பர் கிளிப் பின்னை எடுத்துவிடவும். ஏனென்றால் பலர் சீடி வெளியே வந்த சந்தோஷத்தில் பேப்பர் கிளிப்பைச் செருகியபடியே வைத்துவிடுவார்கள்.

odio changes

altஓடியோ கோப்புகள் பல்வேறான போர்மட்களில் இணையத்தில் கிடைக்கின்றன. MP3, WMA, WAVE, FLAC, AAC, M4A மற்றும் OGG எனப் பல போர்மட்டுகளில் இவை உள்ளன.

இவற்றில் சிலவற்றை மட்டுமே சில கணணிகளில் இயக்க முடியும். பெரும்பாலான ஓடியோ இயக்கும் புரோகிராம்கள் அனைத்தையும் இயக்குவதில்லை.
எனவே தான் அவற்றின் மீது கிளிக் செய்தவுடன் விண்டோஸ் இதனை இயக்க புரோகிராம் ஒன்றை இணையத்தில் தேடவா என்று கேட்கும். இந்தச் சூழ்நிலையில் இது போன்ற ஓடியோ போர்மட் மாற்றும் புரோகிராம்கள் நமக்குத் தேவையாய் உள்ளன.

இந்த இலவச ஓடியோ மாற்றம் செய்யும் புரோகிராமினைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி. மேலே குறிப்பிட்ட அனைத்து போர்மட்களையும் இந்த புரோகிராம் கையாண்டு நமக்குத் தேவையான போர்மட்டில் மாற்றித் தருகிறது.

இதே போல பல வீடியோ போர்மட் கோப்புகளில் இருந்து ஓடியோவினை மட்டும் பிரித்தெடுத்து நாம் குறிப்பிடும் கோப்பு போர்மட்டில் தருகிறது. FLV மற்றும் MPEG போர்மட் கோப்புகளில் இந்த சோதனையை நடத்திய போது சிறப்பாக இயங்கியதனை உறுதி செய்திட முடிந்தது.

போர்மட் மாற்றிய ஓடியோ கோப்புகளை ஐ-ட்யூன் வகையில் வேண்டும் என விரும்பினாலும் அப்படியே மாற்றிக் கொள்ளலாம். ஐ-போன், ஐ-பாட் ஆகிய சாதனங்கள் இயக்கும் வகையிலான போர்மட்களிலும் மாற்றிக் கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஓடியோ கோப்புகளை இணைக்கலாம்.

தரவிறக்க சுட்டி

photo icon

altஇணையத்தில் பல படங்கள் உள்ளன. இவை அனைத்தும் பல format-களில் (PNG, JPG, GIF, BMP) உள்ளன. அந்த புகைப்படங்களை ICON formatகளாக மாற்றுவதற்கு ஒரு இணையத்தளம் உதவி புரிகிறது.
 
கீழே தரப்பட்டுள்ள link-ல் சென்று தளத்தை open செய்து கொள்ளவும். அதன் பின் தோன்றும் window-வில் உங்களுக்கு தேவையான புகைப்படத்தை Browse செய்து உங்கள் கணினியில் இருந்தோ அல்லது இணையத்தில் தேடியோ பதிவேற்றம் செய்து கொள்ளவும்.

பின் Convert Now என்பதை click செய்தால் உங்களது புகைப்படம் ஐகானாக மாற்றப்பட்டு விடும்.
இந்த தளம் விண்டோஸ் 7 -ற்கு ஏற்ற ஐகான்களாக மாற்றவும், ஏற்கனவே ஐகான்களாக இருப்பவற்றை புகைப்படங்களாக மாற்றிவிடவும் உதவி புரிகிறது.


இணைய தள முகவரி - http://convertico.org/

wifi

altநீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle போன்றவற்றில் எதாவது ஒன்றை  பயன்படுத்துவீர்கள் இதனை  எந்தவொரு Router-உம் இல்லாமல் உங்கள்
 கணினியில் இருந்தவாறே Wireless பயன்படுத்தக்கூடிய   Laptop, Smart Phone, iPod Touch, iPhone, Android Phone, Netbook, போன்றவற்றுக்கு Wireless மூலம் இணைப்பை  பகிர்வதற்கு Virtual Router எனும் சிறந்த மென்பொருள் பயன்படுகிறது.
Virtual Router மென்பொருளை பயன்படுத்துவதற்கு உங்கள் கணினியின் Operating System Windows 7 ஆக இருக்கவேண்டும் மற்றும் உங்கள் கணினி Wireless பயன்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும். Laptop கணினிகளில் Wireless சேவை இணைந்தேதான் வருகிறது Desktop கணினி என்றால் Wireless Device  தனியாக போட்டிருக்கவேண்டும் 
சரி இதனை டவுன்லோட் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம் 
1.முதலில் இங்கு சென்று Virtual Router என்ற மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.
2.Install செய்த Virtual Router மென்பொருளை Open செய்து கொள்ளவும் பின்பு கீழே படத்தில் உள்ளவாறு வரும் 
அதில் Network Name (SSID) என்பதில் உங்களுக்கு விரும்பிய ஒரு பெயரை கொடுக்கவும் 
Password என்பதிலும் உங்களுக்கு விரும்பிய ஒரு Password -ஐ கொடுத்து Start Virtual Router என்பதை கிளிக் செய்யவும் alt




 















3.இப்பொழுது உங்கள் கணினியில் இருந்து நீங்கள் கொடுத்த Network பெயரில் Wireless இணைப்பு பகிரப்படும். இதனை வேறு கணினி அல்லது Mobile Phone -களுக்கு பயன்படுத்தவேண்டும்மென்றால் நீங்கள் கொடுத்த Password ஐ கொடுத்து இணைப்பை இணைத்துக்கொள்ளலாம்.
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இது பற்றி தெரியாத உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்துகொள்ளவும் 

free download photoshop

altபோட்டோக்களை அழகாக எடிட் செய்ய உதவும் மென்பொருள் Photoshop ஆகும். ஆனால் Photoshop மென்பொருள் இலவசமல்ல. காசு கொடுத்து வாங்க வேண்டும். இதனால் பெரும்பாலானவர்கள் Photoshop மென்பொருளை crack செய்து பயோகிக்கின்றனர். அதில் நீங்களும் ஒருவர் என்றால் இனி கவலையை விடுங்கள் Photoshop போன்றே அதே சமயம் 100% இலவசமாக ஒரு மென்பொருள் Gimp ஆகும். இந்த மென்பொருளில் Photoshop-ல் உள்ள 90% சதவீத வசதிகள் இதில் உள்ளது. இன்னும் சொல்ல போனால் Photoshop-ல் இல்லாத ஒரு சில வசதிகளும் இந்த Gimp மென்பொருளில் இருக்கிறது. இவ்வளவு வசதிகள் இருந்தும் இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது.   இந்த மென்பொருளின் புதிய பதிப்பான GIMP 2.6.12 வெளிவந்துள்ளது.

சிறப்பம்சங்கள்:
•இந்த மென்பொருளை உபயோகிப்பது மிக சுலபம். சாதரணமாக Ms paint உபயோகிப்பது போல இருக்கும்.
•TIFF, JPEG, GIF, PNG, PSD போன்ற image format-களுக்கு support செய்கிறது.
•முற்றிலும் இலவசமான மென்பொருள்.
•மென்பொருள் இயங்க Photoshop போன்று கணினியில் அதிக இடம் எடுத்துக் கொள்ளாது. ஆகவே இதனை உபயோகிக்கும் பொழுது உங்கள் கணினியின் வேகம் குறைவதில்லை.
•போட்டோக்களை சுலபமாக உயர்தரத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
•Linux, Mac, Windows போன்ற கணினிகளில் இயங்கக் கூடியது.

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய  http://sourceforge.net/projects/gimp-win/

இந்த மென்பொருளின் பயனர் கையேடு(Users Manual) டவுன்லோட் செய்ய -http://sourceforge.net/projects/gimp-win/files/GIMP%20Help%202/GIMP%20Help%202.6.0%20%28updated%20installer%29/gimp-help-2-2.6.0-en-setup.exe/download

MeRAM

alt SDRAM, DDR, DDR2, DDR3 என்ற வரிசையில் புதிதாக MeRAM (Magneto Electric Random Access memority) எனும் புது வகை நினைவகம் கடந்த வாரம்நடந்த 2012 IEEE International Electron Devices Meeting in San Francisco வில் அறிமுகம் செய்யப்பட்டது. ““Voltage-Induced Switching of Nanoscale Magnetic Tunnel Junctions” எனும் தலைப்பில் நடந்த கருத்தரங்கில் MeRAM பற்றிய தகவல்கள் முதன் முதலில் வெளியிடப்பட்டன.
  • spin-transfer torque (STT) எனப்படும் மின் காந்த தொழில்நுட்பத்தில் மின்சாரத்தில் உள்ள நகரும் எலெகட்ரான் மூலம் தகவல்களை நினைவாகத்தில் எழுதும் புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர்.
  • Electron களில் உள்ள காந்தப் பண்பான “சுழற்சி” (Magetic property of elctrons – referred as spin in addition to their charge) எனும் வகையில் இந்த ஆராய்ச்சி நடந்துள்ளது.

  • ஆராய்ச்சியாளர்கள் சில சிக்கல்களை சந்தித்தனர், அதிக தகவல்களை எழுத முற்படும் போது அதிக எண்ணிக்கையில் Electron களை சுழலச் செய்வதால் அதிக மின்சாரமும் அதிக வெப்பமும் ஏற்பட்டது, இதை தவிர்க்க மின்சாரத்தில் உள்ள Voltage ஐ நேரடியாக பயன்படுத்திப் பார்த்தனர். இப்போது வெப்பமும் ஏற்படவில்லை அதே நேரத்தில் குறைந்த இடத்தில் அதிக தகவல்களை எழுத முடிந்தது.
  • இதன் மூலம் மிகக் குறைந்த மின்சாரம்(10 – 1000 மடங்கு குறைவு) , மிக அதிக வேகம், அதிக இடம் (5 மடங்கு) மற்றும் மிகக் குறைந்த விலையில் கணினி நினைவகங்களை உருவாக்க முடியும்.
  • கணினி மட்டும் அல்லாது செல்போன், TV போன்ற பிற மின்சாதனங்களில் இதை குறைந்த விலையில் பயன்படுத்த இயலும்.                           


alt

top 20 websites

உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் பயனாளர்களைக் கொண்டுள்ள இணைய தளம் எது? கண்களை மூடிக் கொண்டு கூகுள் (தேடுதளம்) என்று சொல்லி விடுவீர்கள், இல்லையா?
அதுதான் இல்லை. அண்மையில் எடுத்த கணக்கின்படி கூகுள் இணைய தளம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அப்படியானால் முதல் இடத்தில்? அதுவும் ஓர் அமெரிக்க தளம் தான். இங்கே இந்த வகையில் அதிக தனிநபர் சந்தாதாரர்களைக் கொண்டுள்ள முதல் இருபது இணைய தளங்களை, அதன் வகையுடனும், தன்மையுடனும் காணலாம். இறுதியில் மேலே உள்ள கேள்விக்கான இணைய தளத்தையும் காணலாம்.
 
20.Amazon.com:


எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், உடைகள், விளையாட்டு சாதனங்கள், ஏன் உணவு கூட இங்கு விற்பனை செய்யப் படுகிறது. இதன் தனி நபர் வாடிக்கையாளர் எண்ணிக்கை 16 கோடியே 30 லட்சம். முதன் முதலில் இது தொடங்கிய போது, பொருட்களைப் பெற்று, பேக் செய்து அனுப்பும் பணியைத்தான் மேற்கொண்டதாக இருந்தது. தற்போது இதன் இமாலய வளர்ச்சி, இணைய வர்த்தகத்தின் சிறப்பினைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

19. Sina.com.cn:


மீடியா மற்றும் பயனாளர்கள் உருவாக்கும் தகவல்களைத் தாங்கித் தரும் சீனநாட்டு இணைய தளம். 2000 ஆம் ஆண்டு வாக்கில், சீனாவின் யாஹு தளம் என்ற பெயரை இது பெற்றிருந்தது. 2009ல் Weibo என்ற பெயரில் வலைமனை தளம் ஒன்றையும் இது தொடங்கியது. இந்த தளத்தில் 40 கோடி பயனாளர்கள் உள்ளனர். சினா டாட் காம் தள சந்தாதாரர் எண்ணிக்கை 16 கோடியே 90 லட்சம்.

18. WordPress.com:


17 கோடியே 9 லட்சம் பேர் பயன்படுத்தும் வலைமனைத்தளம். மிக எளிமையான வலைமனை சாதனங்களை இலவசமாக வழங்கி, தன்
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை இந்த தளம் பெருக்கிக் கொண்டது.

17. Apple.com:


ஆப்பிள் சாதனங்கள் மற்றும் அவற்றிற்கான சாப்ட்வேர் புரோகிராம்களுக்கான தனி தளம். இவற்றைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்கள் சந்தேகங்களைப் போக்குவதற்கான தகவல்களைத் தரும் தளமும் கூட. வாடிக்கையாளர் எண்ணிக்கை 17 கோடியே 17 லட்சம்.

16. Sohu.com :


சீன நாட்டில் இயங்கும் பல்நோக்கு இணைய தளம் மற்றும் தேடல் தளம். 1997 ஆம் ஆண்டில், சீனாவின் முதல் ஆன்லைன் சர்ச் இஞ்சின் தளமாக இது தொடங்கப்பட்டது. தொடர்ந்து ஒரு பல்நோக்கு இணைய தளமாகவும், ரியல் எஸ்டேட் இணைய தளமாகவும் வளர்ந்து, இன்று 17 கோடியே 58 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.

15. Bing.com:


மைக்ரோசாப்ட் தன்னுடைய இந்த தளம் குறித்து மிக தீவிரமாக விளம்பரம் செய்தது. மிக எளிதாக தேடலையும் முடிவுகளையும் தரக்கூடிய தளமாக இதனை காட்டி முன்னுக்குக் கொண்டு வர முயன்றது. அதற்கேற்ற வகையில் நவீன தொழில் நுட்பத்தினையும் இணைத்தது. இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 18 கோடியே 40 லட்சம்.

14. Twitter.com:


ரியல் டைம் தொலை தொடர்பினைத் தரும் இணைய தளம். 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நாள் முதல், உலகெங்கும் நடக்கும் நிகழ்வுகளை அறிந்து கொள்ள மக்கள் அணுகும் ஓர் இணைய தளமாக உருவெடுத்துள்ளது. அதற்கேற்ற வகையில், பல நிறுவனங்கள், அரசியல் வாதிகள், மக்கள் தலைவர்கள், ஊடக நிறுவனங்கள், தொழில் முனைவர்கள் ஆகியோர் இதில் தகவல்களைத் தருகின்றனர். இதன் சந்தாதாரர் எண்ணிக்கை 18 கோடியே 98 லட்சம்.

13.Taobao.com:


20 கோடியே 70 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டது. eBay, Amazon போல மிகப் பெரிய வர்த்தக இணைய தளம். இதன் உரிமையாளரான Alibaba.com, இதனை எந்தக் கட்டணமும் இல்லாத தளமாகக் கொண்டு வந்த நாள் முதல், இது தொடர்ந்து பெரிய அளவில் வர்த்தகம் மேற்கொள்ளும் தளமாக உள்ளது.

12. Ask.com:


21 கோடியே 84 லட்சம் பேர் இதன் வாடிக்கையாளர்கள். கூகுள் இதன் பின்னணியில் உள்ளது. இது முதலில் தொடங்கும்போது Askjeeves.com என இருந்தது. பின்னர் மாற்றங்களை அடைந்தது.

11. Blogger.com:


மிகச் சிறிய நிறுவனமாகத் தொடங்கப்பட்ட, இந்நிறுவனம், இணைய தளங்கள் சரிவைச் சந்தித்த போது, தள்ளாடியது. பின்னர், 2002ல், கூகுள் இதனை மேற்கொண்டு தற்போது உயரக் கொண்டு வந்துள்ளது. வலைமனை அமைப்பாளர்கள் அதிகம் நாடும் தளம் இதுதான். 22 கோடியே 99 லட்சம் பேர் இதன் வாடிக்கையாளர்கள்.

10. MSN.com:


மைக்ரோசாப்ட் நிறுவனம் கொண்டுள்ள இணைய வசதிகளில் இதுவும் ஒன்று. இணைய சேவை நிறுவனமாகத் தொடங்கப்பட்டு, ஹாட்மெயில், எம்.எஸ். என். மெசஞ்சர் ஆகியவற்றைக் கொண் டுள்ளது. போர்டல் தளமாக இயங்குகிறது. இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 25 கோடியே 41 லட்சம்.

9. Baidu.com:


வெப்சைட், ஆடியோ பைல்கள், இமேஜஸ் ஆகியவற்றைத் தேடிப் பெற சீனா கொண்டுள்ள இணைய தளம் இது. ஆயிரக்கணக்கான சீனப் பொறியாளர்கள், தொடர்ந்து இதன் தகவல்களை அப்டேட் செய்து வருகின்றனர். இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 26 கோடியே 87 லட்சம்.

8. Micorosoft.com:


கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் அறிந்த தளம். இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 27 கோடியே 17 லட்சம்.

7. QQ,com:


சீனாவில் இயங்கும் தேடல் இணைய தளம் மற்றும் தகவல் களஞ்சிய தளம். இதனை உருவாக்கியது Tancent என்ற சீன நிறுவனம். இன்ஸ்டன்ட் மெசேஜ் சேவையில் இது சீனாவில் முதல் நிலைத் தளமாக உள்ளது. இந்த வகையில் 70 கோடி பேர் தனது வாடிக்கையாளர் என இத்தளம் குறிப்பிட்டுள்ளது. Qzone and the Tencent Weibo blog என இதனுடையை இரண்டு தளங்களும் சீனாவில் புகழ் பெற்றவை. இந்த தளத்தின் வாடிக்கையாளர்கள் 28 கோடியே 41 லட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

6. Live.com:


மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய இமெயில் தளம். அவுட்லுக் மற்றும் ஹாட் மெயில் தளங்களை ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டது. இதன் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை 38 கோடியே 95 லட்சம்.

5. Wikipedia.org:


46 கோடியே 96 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டது. இலவசக் கலைக் களஞ்சியமாக இயங்கி வருகிறது. யார் வேண்டுமானாலும், இதில் தகவல்களை ஏற்றலாம். இருப்பவற்றை எடிட் செய்திடலாம். இந்த தளத்திற்கு அதிகம் வருபவர்கள், கூகுள் தளத்தைத் தேடுபவர்களாகவே உள்ளனர்.

4. Yahoo.com:


இணைய பல்நோக்கு தளங்களில் முன்னோடியானது இந்த தளம். தேடல் சாதனமாகவும் இணைய போர்டல் தளமாகவும் செயல்படுகிறது. இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 46 கோடியே 99 லட்சம்.

3. Youtube.com:


பயனாளர்கள் உருவாக்கிய வீடியோ காட்சிகளைப் பகிர்ந்து கொள்ள, பார்த்து ரசிக்க இது ஓர் அருமையான தளமாகப் பல்லாண்டுகள் இயங்கி வருகிறது. 2006ல் இதனை கூகுள் நிறுவனம் தனதாக்கிக் கொண்டு, தொடர்ந்து பல வசதிகளை அளித்து வருகிறது. இதன் தனி நபர் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 72 கோடியே 19 லட்சம்.

2. Google.com:


78 கோடியே 28 லட்சம் பேரைத் தன் வாடிக்கையாளர்களாகக் கொண்ட இந்த தேடுதல் தளம், இவ்வகையில் இன்று உலகின் முதல் இடம் பெற்ற தளமாக உள்ளது. ஜிமெயில், ஜிமேப்ஸ், கூகுள் ப்ளஸ், கூகுள் மெயில் என இணையத்தில் இயங்கும் அனைவரையும் ஏதாவது ஒரு வகையில் இழுத்துப் போட்டு வைத்துக் கொள்கிறது.

1. Facebook.com:


இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் கேட்ட கேள்விக்கான பதில் இங்கே உள்ளது. பேஸ்புக் தளம் தான், உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கையில் தனிநபர் வாடிக்கையாளர்களைக் கொண்டதாக இயங்கி வருகிறது. இந்த சமூக இணைய தளத்தின் மூலம், உங்கள் நண்பர்கள் அனைவரையும் உடனுடக்குடன் தொடர்பு கொண்டு தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம். முதன் முதலில் ஹார்வேர்ட் பல்கலைக் கழக மாணவர்களுக்கு மட்டும் எனத் தொடங்கப்பட்ட இந்த சமூக தளம் இன்று உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் நண்பர்களைக் கொண்ட தளமாக இயங்குகிறது.

alt
  • இப்போது தேடுதல் என்பதற்கு மறு பெயராக குறிப்பிட கூடியது கூகிள் தேடுதளம் இந்த தளத்தில் நாம் தேடும் போது தவறுதலாக ஆபாச படங்கள் வந்து சேர்ந்துவிடும் இதை தடுப்பதற்கு கூகிள் ஒரு வசதியை தந்துள்ளது. 

இந்த வசதி எவ்வாறு இயக்கப்பட வேண்டும் என்பதை பார்ப்போம்
ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..?
நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் .
…முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.
பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.
அல்லது
http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்..
Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள், அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.
Locking Process நடைபெறும் பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.
அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.
இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .
நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்.
google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள்…
Setting போய் பாத்துட்டு அட ஆமா இருக்கு’ல ன்னு சும்மா இருக்காம… setting correct’ah பண்ணுங்க…

Sunday, 27 October 2013

team viewer

உங்கள் கணினியை தொலைவில் உள்ள நண்பர்களுடன் பகிர்வது எப்படி?

அதுபோல உங்கள் கணினியின் திரையை தொலைவில் உள்ள நண்பர்கள் பார்ப்பதற்கும், அங்கே இருந்தபடி உங்கள் கணினியையே இயக்கவும் உதவும் ஒரு மென்பொருள்தான் டீம்வியூவர்.

உங்கள் கோப்புகளை ஏதேனும் கோப்புப்பகிர்வான் (File sharing) தளங்களில் ஏற்றி அதன் சுட்டியை நண்பர்களுக்குக் கொடுத்து அவர்களை இணையிறக்கம் (Download) செய்யச் சொல்லி கோப்புகளைப் பகிர்ந்து மகிழ்ந்தவர்கள் இணையத்தில் எத்தனையோ பேர்.

இந்த சுட்டியினை அழுத்தி மேலே தோன்றும் வலைப்பகுதிக்கு செல்லவும். அதில் தரவிறக்கம்(Download) என்ற பகுதியை அழுத்தியவுடன்
கீழே உள்ளது போல் ஒரு pop-up window தோன்றியது

அதில் (Save) என்ற பித்தானை அழுத்தி வழக்கமாக சேமிக்கும் பகுதியில் தரவிறக்கம் செய்யவும்
பின்னர் அந்த கோப்பை (TeamViewer_Setup.exe) இரண்டுமுறை கிளிக்கியவுடன்
கீழே உள்ளது போல் ஒரு pop-up window தோன்றும்
மேலே உள்ளதில் (Run) என்ற பித்தானை அழுத்தவும்
மேலே இருக்கும் பகுதியில் (Install - Run) இருந்தது.
அதில் (Run) என்பதை அழுத்தி பிறகு (Next)ஐ கிளிக் செய்யவும்
மேலே உள்ள (Agreement)ஐ டிக்கிவிட்டு (Next)அழுத்தவும்
(விஸ்டாவாக இருந்தால் (Unblock)ஐ அழுத்தவும்)
அவ்வளவு தான் நிறுவியாயிற்று.
(இதுவரை சொல்லியது மாதிரி இரண்டு பக்க கணினியிலும் நிறுவ வேண்டும்.)
இனி எப்படி உபயோகிப்பது என்று பார்ப்போம்.
இரண்டு பக்கங்களிலும் இது போல் ஒரு சாளரம் தோன்றும்.
Wait for Session
Create Session
IDID ...........................
Password 
ID என்ற இடத்தில் உள்ள 9 இலக்க எண்களையும்
password என்ற இடத்தில் உள்ள 4 இலக்க எண்களையும் நீங்கள் - மற்றவரிடம் சொல்ல.
வலப்பக்கம் ID என்ற இடத்தில் தொடர்ச்சியாக 9 இலக்க எண்ணை இட்டு பின் (Remote Support) என்ற தேர்வை தேர்வு செய்து பிறகு (connect to partner) என்ற பித்தானை அழுத்தினார்கள்
பின் தோன்றும் இந்த சாளரத்தில் 4 இலக்க எண்ணை தட்டச்சு செய்து (Log On) என்ற பித்தானை அழுத்தியவுடன் உங் கள் கணினி மற்றவரின் சாளரத்தில் தோன்றியது.
சில வினாடிகளுக்குள்ளாகவே உலகின் ஏதோ ஒரு இடத்தில் உள்ள நண்பரது கணினியையும், உங்களது கம்ப்யூட்டரையும் இணைத்து அவரது கணினியை நீங்களும், உங்கள் கணினியை அவரும் இயக்கலாம்.

கோப்புகளைப் பகிர்வதும், இணைய அரட்டை (chat) அடிப்பதும் இதில் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது.

வணிக ரீதியில்லாத, தனிமனிதப் பயன்பாடுகளுக்கு இந்த அப்ளிகேசன் இலவசமாகவே கிடைக்கிறது.

தொலைதூரத்தில் உள்ள சர்வர்களை (remote server) இங்கிருந்தே இயக்கவோ, மறுபடி துவக்கவோ (Reboot) இயலும்.

நிறைவான பாதுகாப்பையும் (hight security), அது உயர் வேகத்தையும் டீம்வியூவரிடம் எதிர்பார்க்கலாம்.

ஃபயர்வால் (firewall) பாதுகாப்புச் சுவர் போன்றவற்றை பல நேரங்களில் ரிமோட் டெஸ்க்டாப் (Remote Desktop) ஊடுருவாது.

ஆனால் ஃபயர்வால் பிரச்சினைகளை டீம்வியூவர் எதிர்கொள்வதில்லை. ஏதேனும் ஒரு மென்பொருள் பயன்பாட்டை கணினியில் install செய்வதற்குஅட்மினிஸ்ட்ரேட்டர் உரிமம் தேவைப்படும். ஆனால் டீம்வியூவரை இன்ஸ்டால் செய்வதற்கு Administrator உரிமம் தேவைப்படாது.

http://www.teamviewer.com/